முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      இந்தியா
Ramadoss Anbu-mani

புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பா.ம.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். பா.ம.க. தங்களுடையதுதான் என்று ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

மாம்பலம் சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். தேர்தல் ஆணையமும் அன்புமணியை பா.ம.க. தலைவராக அங்கீகரித்துள்ளது. இதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ராமதாஸ் சார்பில் ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உரிமையியல் நீதிமன்றம் சென்று முறையிடுங்கள் என்று கோர்ட்டு தெரிவித்தது.

இந்நிலையில் டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது, பா.ம.க. கவுரவ தலைவராக உள்ள ஜி.கே மணி புகார் அளித்துள்ளார். அதில் அவர், "அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியின் தலைவர் பதவி இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. போலியான ஆவணங்களை வழங்கி தலைவர் பதவி பெற்றுள்ள அன்புமணி மீது நடவடிக்கை வேண்டும்." என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து