முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06012) மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து 8-ந்தேதி (நாளை) மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06011) மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

இதேபோல், திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06108) மறுநாள் காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து 8-ந்தேதி (நாளை) மதியம் 1.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06107) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைகிறது. 

மேலும், கோவை - எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06024) மறுநாள் காலை 9.20 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து 8-ந்தேதி (நாளை) பகல் 12.20 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06023) அதேநாள் இரவு 10.30 மணிக்கு கோவையை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து