முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் பல்கலை.,யில் ஆய்வு படிப்பிற்கு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிகலாம்:அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      உலகம்
TN 2023-04-06

லண்டன், அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தின் பிரிவான எஸ்.ஓ.ஏ.எஸ். (கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான பள்ளி) ஒரு புதிய ஆய்வுப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அம்பேத்கர்-கலைஞர் சமூக நீதி மற்றும் கூட்டாட்சி வருகை ஆய்வாளர் படிப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் லண்டனில் மூன்று மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம். அம்பேத்கர் மற்றும் கலைஞரின் கண்ணியம், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கான தொலைநோக்குச் சிந்தனைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ஆய்வுப் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சபரீசன் வேதமூர்த்தி நிதியுதவியுடன் இந்த ஆய்வுப் படிப்பு லண்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையுடன் இணைந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கலைஞர் பெயரில் ஒரு ஆய்வுப் படிப்பை உருவாக்கி உள்ளார்.

திராவிடம், ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி, மனித உரிமைகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாக சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஆய்வுப் படிப்புக்குத் தேவையான பயணச் செலவு, விசா கட்டணம், மூன்று மாதங்களுக்கான ஸ்டைபெண்ட், பல்கலைக்கழகக் கட்டணங்கள் என அனைத்துச் செலவுகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படும். 

இந்த நிதியுதவியின் மூலம், ஆய்வாளர்கள் லண்டனில் தங்கி, தங்களது முழு கவனத்தையும் ஆய்வுப் பணிகளில் செலுத்த முடியும். ஆய்வு மாணவர்கள் எஸ்.ஓ.ஏ.எஸ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுப்பார்கள். அவர்களுக்கு தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநரின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். அவர்கள் வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகளில் கலந்து கொள்வார்கள். படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். சபரீசன் வேதமூர்த்தி திராவிட இயக்கம் தொடர்பான 200 புத்தகங்களையும் எஸ்.ஓ.ஏ.எஸ். நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து