முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பயணம் நிறைவு: ரஷ்யா சென்றார் புதின்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      உலகம்
Putin 2024 08 11

டெல்லி, இந்திய பயணத்தை நிறைவு செய்து விட்டு புதின் ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார்.

2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புதன்கிழமை இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக புதின் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி நேற்று முன்தினம் 23வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டனர். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த பயணத்தின்போது இந்தியா , ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில் 2 நாzகள் அரசு பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் நேற்று முன்தினம் இரவு ரஷ்யா புறப்பட்டு சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழி அனுப்பி வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து