முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      விளையாட்டு
South-Africa 2023-12-24

Source: provided

கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.

சுற்றுப்பயணம்... 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

9-ம் தேதி துவக்கம்...

இதனையடுத்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.

லூதோ சிபாம்லா... 

இவர்களில் டோனி டி சோர்ஜி இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தொடை பகுதியில் காயமடைந்தார். மறுபுறம் குவேனா மபாகா ஏற்கனவே ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் விலகியுள்ளார். குவேனா மபாகாவுக்கு பதிலாக லூதோ சிபாம்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க டி20 அணி: 

மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், குயின்டன் டி காக், டொனோவன் பெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, லூதோ சிபாம்லா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து