முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு: மத்திய அரசு தகவல்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் மக்களவையில், டெங்கு பாதிப்பு தொடர்பான கேள்விகளை கேட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக டெங்கு அதிகரித்து இருக்கிறதா? இறப்புவீதம் அதிகரித்துள்ளதா? என அவர் கேட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுபிரியா பட்டேல் நேற்று முன்தினம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். 

அதில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நோய்க்கிருமி, பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம், நாட்டில் டெங்கு போன்ற பரவும் நோய்களைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் செயல்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் ஆகிய காலக்கட்டத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 855 ஆக இருந்த டெங்கு பாதிப்பு, இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 75 ஆயிரத்து 534 ஆக குறைந்துள்ளது. அதேபோல் இறப்பு வீதமும் குறைந்து உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து