முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Udhayanidhi

Source: provided

சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கழகத்தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், சட்டமன்ற தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறோம். அந்த வகையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகம் ஏற்பாட்டில், செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான கழக நிர்வாகிகள் - அணிகளின் நிர்வாகிகள் - பூத் கமிட்டி நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடினோம்.

வளர்ச்சி பாதையில் செல்லும் தமிழ்நாட்டில், சூழ்ச்சிகள் மூலமாக காலடி எடுத்து வைக்க துடிக்கும் பாசிஸ்டுகளையும் - அவர்களின் அடிமைகளையும் வீழ்த்த, அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் ஓரணியில் நின்று உழைப்போம் ; 2026-ல் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம். என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து