முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      உலகம்
Jelensky 2023 06 27

புதுடெல்லி, ஜனவரி மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கலந்து கொண்டனர். மேலும் இந்தியா-ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சமீப காலமாக இந்தியா-அமெரிக்கா உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், ரஷ்ய அதிபரின் இந்திய வருகை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. புதினின் வருகையின்போது, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை என்றும், அமைதியின் பக்கம் இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து புதின் பேசுகையில், அமைதியான தீர்வை நோக்கி ரஷ்யா செயல்பட்டு வருகிறது என்று கூறினார். இந்த சூழலில், ரஷ்ய அதிபர் புதினின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இதன்படி வரும் ஜனவரி மாதம் ஜெலன்ஸ்கி டெல்லிக்கு வர உள்ளதாகவும், அவரது பயண தேதி இந்திய-உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து