முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். விவாதம்: பா.ஜ.க. பார்லி., கூட்டம் இன்று கூடுகிறது

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      இந்தியா
Parliament-2024-11-27

டெல்லி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (டிச. 9, செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிச. 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்கவுள்ளதாகவும் இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும் என்றும் நாளை (புதன்கிழமை) காலை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் பதிலளித்து பேசவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (டிச. 9) கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பா.ஜ.க. பாராளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிச. 9, செவ்வாய்க்கிழமை காலை 9. 30 மணிக்கு பாராளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து