முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2025      இந்தியா
Electronic-Machine 2023-10-

திருவனந்தபுரம், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.

கேரளாவில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 

பஞ்சாயத்து அடிப்படையில் ஒரு வாக்காளர் கிராம, ஊராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து என 3 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை ஆர்வமாக செலுத்தினர். 

உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கேரளத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து