முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச்சு: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி.யில் ஆளும் கட்சியினர் அமளி

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2025      இந்தியா
Parliament-2024-11-27

டெல்லி, மக்களவையில் எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கிய நிலையில்  அமளி ஏற்பட்டது.

மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கியிருக்கிறார். அவர் பேச்சைத் தொடங்கியவுடனேயே நாட்டில் அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ். கைப்பற்ற முயற்சிப்பதாகவும் பா.ஜ.க. அரசு எல்லாவற்றையும் பேச மட்டுமே செய்கிறது, ஆனால் செயலில் எதுவும் இல்லை என பேசினார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் ஒவ்வொன்றாக எப்படி கைப்பற்றியது என்றும் பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ராகுல் பேச வேண்டும் என்றும் விவாதத்தை மடைமாற்ற முயற்சிப்பதாக ராகுல் மீது அமைச்சர் குற்றம்சாட்டினார். இதனால் ஆளும் பா.ஜ.க. மற்றும் இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆளும் கட்சியினரின் எதிர்ப்புக்கு இடையே ராகுல் காந்தி தொடர்ந்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து