எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 476 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (10.12.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும், நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் முக்கிய செயல்பாடுகள் நிலங்களை அளவிடுதல், உட்பிரிவு செய்தல், பட்டா மாற்றம் செய்தல், நில ஆவணங்களைப் பராமரித்தல், கணினிமயமாக்கல் மற்றும் நில உரிமை முறைகளை முறைப்படுத்துதல் போன்றவையாகும். இது வருவாய் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு, நிலம் தொடர்பான உரிமைகள், இருப்பிடம், அளவு மற்றும் வகை பற்றிய தகவல்களைப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிப்பதை உறுதி செய்கிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 800 நிலஅளவர்களும், 302 வரைவாளர்களும் புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்சமயம் 2025-ஆம் ஆண்டில் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இத்துறையின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இணையவழி பட்டா மாறுதல் சேவையின் மூலமாக இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் இனங்களில் 61.77 இலட்சம் பட்டாக்களும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்களில் 79.25 இலட்சம் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் இனங்கள் தீர்வு செய்ய 60 நாட்களும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்கள் தீர்வு செய்ய 31 நாட்கள் என இருந்து வந்த நிலையில், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் இனங்கள் 30 நாட்களிலும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்கள் 14 நாட்களிலும் தீர்வு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசு நிலங்களில் நீண்ட காலமாக அனுபவம் செய்து வந்த ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் பல்வேறு திட்டத்தின் கீழ் இந்த அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இதுவரை 20.41 லட்சம் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


