எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகம் முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நேற்று தொடங்கிய நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க.வினரை உற்சாகத்துடன் ஈடுபடுத்தும் விதமாக "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்பை மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்ட செய்திக்குறிப்பில், தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று (10.12.2025) மயிலாப்பூர் மேற்கு பகுதி, ஆழ்வார்பேட்டை, 122-வது வட்டம், பாகம் 24-இல் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
"தமிழ்நாடு தலைகுனியாது - என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பரப்புரையின் முதல் கட்டமாக 68,463 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் 6.8 லட்சம் பேர் பி.எல்.ஓமற்றும் வாக்காளர்களுக்கு உதவிட முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
பரப்புரையின் இரண்டாம் கட்டம் நேற்று முதல் தொடங்கியது. அடுத்த 30 நாட்களுக்கு மாநிலம் தழுவிய தீவிரமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 10 வரை, பகுதி/ஒன்றியம்/நகரம்/பேரூர் கழக செயலாளர்கள் 68,463-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று 2026 சட்டமன்ற தேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்தவொரு கட்சியும் செய்யாத வகையில் 1900 மேற்பட்ட பகுதி/ஒன்றியம்/நகரம்/பேரூர் கழக செயலாளர்களுடன் - 78 கழக மாவட்ட செயலாளர்கள், 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 124 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட குழு உறுப்பினர்கள் குழுவானது 30 நாட்களில் 68,463 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 6.8 லட்சம் தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும், அணிதிரட்டவும் பரப்புரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் அடித்தட்டு அளவில் கழக்கத்தினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடி பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், முன்னோடி தலைவர்கள் உட்பட அனைத்து தி.மு.க. நிர்வாகிகளும் 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், வாக்குச்சவாடி குழு உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்து கொடுத்தார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து தி.மு.க. தலைமையில் சமர்ப்பித்தனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


