எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ரூ.13.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்து, உணவு தானியங்களை சேமித்து வைக்க திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.332.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.12.2025) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் – பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 7,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 13.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்தார்.
மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் நோக்குடன் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைத்திடவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பினை வட்ட அளவில் உறுதி செய்யவும், பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான தானியங்களின் சேமிப்பிற்கான கொள்ளளவினை அதிகப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்தில் 4.97 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் 4.50 கோடி ரூபாய் செலவில் 2500 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் 4.50 கோடி ரூபாய் செலவில் 2500 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், என மொத்தம் 13.97 கோடி ரூபாய் செலவில் 7000 மெ.டன் கொள்ளளவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூர் கிராமத்தில் 170.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,00,000 மெ.டன் கொள்ளளவிலும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்தில் 29.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,500 மெ.டன் கொள்ளளவிலும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் 22.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17,000 மெ.டன் கொள்ளளவிலும், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், பரசலூர் கிராமத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும், தரங்கம்பாடி வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21,000 மெ.டன் கொள்ளளவிலும் நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், டி.புடையூர் கிராமத்தில் 12.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,500 மெ.டன் கொள்ளளவிலும் மற்றும் திட்டக்குடி வட்டம், தாழநல்லூர் கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11,000 மெ.டன் கொள்ளளவிலும்; திருவண்ணாமலை மாவட்டம், மேல்பெண்ணாத்தூர் வட்டம், செங்கம் கிராமத்தில் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,000 மெ.டன் கொள்ளளவிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கோவிலம்மாபட்டி கிராமத்தில் 12.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூப்பள்ளி கிராமத்தில் 12.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும் என மொத்தம் 2,18,000 மெ.டன் கொள்ளளவில், 332 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


