முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி: இந்திய அணி புதிய சாதனை

புதன்கிழமை, 10 டிசம்பர் 2025      விளையாட்டு
Indian-Team-2025-12-10

சென்னை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

அபார வெற்றி....

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 9-வது முறையாக இந்தியா 100 ரன்னுக்கு வெற்றியை பெற்று சாதனை படைத்தது. ஐ.சி.சி. முழு நேர உறுப்பினர்களின் வேறு எந்த அணியும் 9 முறை இது மாதிரியான வெற்றியை பெற்றது கிடையாது. மற்ற அணிகள் 4 தடவைதான். 100 ரன்னுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன.

கனடா அணி...

கனடா அணி அதிகபட்ச மாக 10 தடவை 100 ரன்னுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 2023-ம் ஆண்டு நியூசிலாந்தை 168 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாகும். தென் ஆப்பிரிக்கா 6-வது முறையாக இது மாதிரியான தோல்வியை தழுவியது. வேறு எந்த ஐ.சி.சி. முழு நேர நாடுகளும் இப்படி தோற்றது இல்லை. இந்தியாவிடம் மட்டும் 3-வது தடவையாக 100 ரன்னுக்கு மேல் தோற்றது. 74 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்காவின் குறைந்த பட்ச ஸ்கோராகும்.

புவனேஷ்வர்...

2 விக்கெட் கைப்பற்றிய தன் மூலம் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமாரின் சாதனையை சமன் செய்தார். முதல் 6 ஓவரில் (பவர் பிளே) புவனேஷ்வர் குமார் 47 விக்கெட்டுகளை (1152 பந்துகள்) வீழ்த்தி இந்திய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். அர்ஷ்தீப் சிங் 750 பந்துகளில் 47 விக்கெட்டுகளை கைப்பற்றி சமன் செய்தார். பும்ரா முதல் 6 ஓவரில் 33 விக்கெட் (840 பந்து) எடுத்து 3 -வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து