முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை

புதன்கிழமை, 10 டிசம்பர் 2025      விளையாட்டு
Bumrah-2025-12-10

புவனேஷ்வர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இந்தியா வெற்றி...

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

100 விக்கெட்டுகள்....

பும்ரா டெஸ்ட்டில் 234 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் நேற்று முன்தினம் நடந்த டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து