முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் ஈ.வி.எம். சரிபார்ப்பு பணி துவக்கம்

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      இந்தியா
Electronic-Machine 2023-10-

புதுடெல்லி, தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்படைந்துள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை எல்லாம் திரைக்கு பின்னால் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தகுதியான வாக்காளர்களை மட்டும் ஓட்டுப் போடச் செய்யும் நடவடிக்கையாக வாக்காளர்கள் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அப்போதுதான் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவரும். சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தேர்தலின்போது வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்.) சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது. 

வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பணிகளின்போது, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பணிகளை பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து