முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெண்கலம் வென்றது இந்தியா

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      தமிழகம்
india-2025-12-11

சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது. 

14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் எழுச்சி பெற்ற இந்திய அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து