முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட் போட்டி: 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் புதிய மைல்கல்

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      விளையாட்டு
Hardik-2025-12-11

நியூ சண்டிகர், டி-20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் பாண்ட்யா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

அபார வெற்றி...

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது ஆட்டம் நியூ சண்டிகரில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 74 ரன்னில் சுருட்டி 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

122 போட்டிகளில்...

மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக அவர் 121 போட்டிகள் விளையாடி 99 விக்கெட் எடுத்திருந்தார். நேற்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அவர் 100-வது விக்கெட்டை எடுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

3-வது இந்திய வீரர்... 

100-வது விக்கெட்டை எடுக்கும் 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். கடந்த போட்டியின் போது பும்ரா 100 விக்கெட்டை தொட்டார். அவர் 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். முதல் 20 ஓவர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தி அரை சதத்தை பதிவு செய்தார். அதோடு ஒரு விக்கெட்டும் கைப்பற்றிதன் மூலம் அவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து