முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் தி.மு.க. கோரிக்கை

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      இந்தியா
Parlimanet 2024-06-30

புதுடெல்லி, கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் மக்களவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இதனையடுத்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அவைத் தலைவர் ஓம் பிர்லா அழைத்துப் பேசியதையடுத்து டிசம்பர் 3ஆம் தேதி முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன.

நடப்பு கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக, 'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் 8ஆம் தேதி விவாதம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி விவாதத்தை தொடங்கி வைக்க, காங்கிரஸ் எம்.,பி பிரியங்கா காந்தி, தமிழக எம்பிக்கள் ஆ.ராசா, துரை வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர். மற்றொரு முக்கிய நிகழ்வாக, எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு விவாதம் நடைபெற்றது. 

விவாதத்தை துவக்கி வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் ஜனநாயகத்தை சிதைக்கும் நோக்கில் தேர்தல் ஆணையத்தை மத்திய பாஜக அரசு கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். நேற்றைய தினமும் எஸ்.ஐ.ஆர், வந்தே மாதரம் குறித்த விவாதங்கள் மாநிலங்களவையில் நடைபெற்றன.

இந்தநிலையில், தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது என மக்களவையில் தி.மு.க. எம்பி.க்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மக்களவையில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியம் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை தி.மு.க.வை சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. ஆட்சி நிர்வாகத்தில் பிற இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து