முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியில் 16 சதவீதம் பெற்று பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி நாட்டிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் தனிநபர் வருமான உயர்விலும் தமிழ்நாட்டின் வெற்றி தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய மாநிலம் இல்லை....

ஜி.எஸ்.டி.பி. என்பது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைக் குறிப்பதாகும். இது குறித்து அவர் தனது எக்ஸ் பகக்த்தில், “வானுயர் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை, இருந்தும் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியில் 16 சதவீதத்துடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல். கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான். சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி.

10.5 லட்சம் கோடி ரூபாய்... 

2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம். மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி. நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம்  தமிழ்நாட்டுக்கே சொந்தம். தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி. 2031-ம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன், இது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து