எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. குறிப்பாக, மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முன்மொழிவைக்கூட இந்த தி.மு.க. அரசு முழுமையாக வழங்கவில்லை.
வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்வு, வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீத வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டணம், குப்பை வரி ஆகியவற்றின் உயர்வால், மதுரை மாநகராட்சியின் வரி வருவாய் பலமடங்கு உயர்ந்தும், தி.மு.க. ஆட்சியில் மதுரை மாநகரில் அனைத்து வட்டங்களிலும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றன; சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. மதுரை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், எனது தலைமையிலான அம்மாவின் அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை மனதில் வைத்து, முதல்-அமைச்சர் ஸ்டாலின், கடந்த வாரம் இத்திட்டத்தை அவசர கதியில் தொடங்கி வைத்தார்.
24 மணி நேரமும் மதுரை மாநகர் மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை, அவசர கதியில் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்ததால், மதுரை மாநகர மக்களுக்கு, நாள் முழுவதும் குடிநீர் வழங்குவதற்கு பதில், பழையபடி குறிப்பிட்ட நேரங்களுக்கே குடிநீர் வழங்கப்படுகிறது. மதுரை மாநகர் முழுவதும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. மேலும், தி.மு.க.-வைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி மேயர், நிலைக் குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, முறைகேடான வரி விதிப்பின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, தி.மு.க. அரசின் அதிகாரிகளே கண்டறிந்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மேயரும், மண்டலக் குழுத் தலைவர்கள் சிலரும் ராஜினாமா செய்ததைத் தவிர, இந்த ஊழலில் திளைத்த மற்றவர்கள் மீது, இதுவரை இந்த தி.மு.க. அரசு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும்; முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும்; குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை புதுப்பிக்காத, மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்காத மாநகரட்சி நிர்வாகத்தையும்; இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தி.மு.க. அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 17.12.2025 புதன் கிழமை காலை 10 மணியளவில், பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ., மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும், மதுரை மேற்கு 5-ஆம் பகுதிக் கழகச் செயலாளரும், மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான சோலைராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகங்களைச் சேர்ந்த, தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மதுரை மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற தி.மு.க. பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


