முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு

புதன்கிழமை, 17 டிசம்பர் 2025      தமிழகம்      அரசியல்
Kanimozhi 2023-10-13

சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர, அரசியல் கட்சிகள் கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம். கடந்த ஆண்டு தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது.

அதேபோல, ஒவ்வொரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய இருக்கிறோம் என்பதை குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்க குழு அமைத்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு கனிமொழி தலைமை தாங்குகிறார். குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு: டிகேஎஸ் இளங்கோவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ரஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டைன் ரவீந்திரன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி சந்தானம், சுரேஷ் சம்பந்தம்” ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து