முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      இந்தியா
sonia-gandhi

புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

பி.எம்.எம்.எல்-இன் 2025 ஆண்டு தணிக்கையில் நேரு தொடர்பான ஏதேனும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளனவா என்று பா.ஜ.க. எம்.பி சம்பித் பத்ரா மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்,' பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் நடப்பாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேரு தொடர்பான ஆவணங்கள் எதுவம் மாயமானதாக கண்டறியப்படவில்லை. அருங்காட்சியகம் வசமுள்ள ஆவணங்கள் ஆண்டுதோறும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பாக கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை,' என பதிலளித்து இருந்தார்.

இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம், 'இறுதியில் உண்மை வெளியிடப்பட்டுவிட்டது. இனி மன்னிப்பு கேட்கப்போவது எப்போது,' என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏப்ரல் 29, 2008ம் ஆண்டு சோனியா காந்தியின் பிரதிநிதியான எம்.வி. ராஜன், ஜவஹர்லால் நேருவின் அனைத்து தனிப்பட்ட குடும்ப கடிதங்கள் மற்றும் குறிப்புகளை சோனியா காந்தி திரும்பப் பெற விரும்புகிறார் என கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, "நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள் உட்பட 51 அட்டைப்பெட்டிகள் 2008 இல் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டன". ஜனவரி 28, 2025 மற்றும் ஜூலை 3, 2025 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்ட கடிதங்கள் உட்பட,  இந்த ஆவணங்களைத் திருப்பி தர பலமுறை சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதனை அவர் இன்னும் திருப்பி தரவில்லை. ஜவஹர்லால் நேரு தொடர்பான ஆவணங்கள், இந்தியாவின் ஆவணப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்,  அவற்றை தனியார் சொத்தாகக் கருத முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து