முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராவிஸ் ஹெட் அபார சதம்: 356 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸி.,

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025      விளையாட்டு
Australia-cricket-2025-12-1

அடிலெய்டு, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 356 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

326 ரன்கள்...

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் அடித்திருந்தது. மிட்செல் ஸ்டார்க் 33 ரன்னுடனும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்களில் ஆட்டமிழந்தார். 

2-வது நாள் ஆட்டம்.... 

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜாக் கிராலி 9 ரன்களிலும், அடுத்து வந்த போப் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த பென் டக்கெட் 29 ரன்களிலும், ஜோ ரூட் 19 ரன்களிலும் அவுட்டாகினர். 

காப்பாற்ற போராட்டம்...

ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது. இந்த இக்கட்டான சூழலில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - ஹாரி புரூக் ஜோடி சேர்ந்து அணியை காப்பாற்ற போராடினர். 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. புரூக் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் 22 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 6 ரன்களிலும், பிரைடன் கார்ஸ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். பின்வரிசையில் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் ஸ்டோக்சுடன் கை கோர்த்து அணிக்கு வலு சேர்த்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணி 200 ரன்களை கடக்க உதவியது.

சிறப்பாக விளையாடி... 

இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் அடித்துள்ளது. ஸ்டோக்ஸ் 45 ரன்களுடனும், ஆர்ச்சர் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்டோக்ஸ் அரைசதமடித்தார்.சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் 83 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் நிலைத்து விளையாடி ஆர்ச்சர் அரைசதமடித்தார். அவர் 51 ரன்களில் வெளியேறினார்.இறுதியில் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 85 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் , போலந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

வலுவான நிலையில்...

 

தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 3வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 356 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார். மேலும் அலெக்ஸ் கேரி அரைசதமடித்தார். ஹெட் 142 ரன்கள், கேரி 52 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து