முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2025      தமிழகம்
DMK-Offces 2023 03 31

சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார்.  கவிதை - கவிஞர் நா.சுகுமாரன், சிறுகதை - ஆதவன் தீட்சண்யா, நாவல் - இரா. முருகன், உரைநடை - பேராசிரியர் பாரதிபுத்திரன் (சா.பாலுசாமி), நாடகம் - கருணா பிரசாத், மொழி பெயர்ப்பு - வ. கீதா , நாடகப் 2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் புத்தக கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட உள்ளது. கவிதை, நாவல், மொழிபெயர்ப்புகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பாடுபொருளிலும், வடிவத்திலும் தனித்துவமிக்கக் கவிஞர். கவிஞர் பாப்லோ நெரூதாவின் பாதிப்புடன் உலகத் தரமான கவிதைகளைப் படைத்த படைப்பாளர்.

கோடைகாலக் குறிப்புகள், பூமியை வாசிக்கும் சிறுமி, சுகுமாரன் கவிதை (1954-2019) இன்னொரு முறை சந்திக்க வரும்போது ஆகியவை சிறந்த தொகுப்புகள். குங்குமம் இதழில் பணி புரிந்துள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தீவிர இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நான் ஒரு மது விரோதி, லிபரல் பாளையத்துக் கதைகள், ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் முதலியவை இவரது சிறந்த சிறுகதைகள். சமூகநீதி சார்ந்து சிறந்த கதைகளை மாறுபட்ட மொழிநடையில் எழுதிய படைப்பாளர். 21ஆம் நூற்றாண்டில் இதுவரை எவரும் கையாளாத மொழிநடையில் கதைகளை எழுதியது இவருடைய சிறப்பு. மேலும் இவர் தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே. இரா. முருகன் குறுநாவல்கள் போன்ற நாவல்களைப் படைத்தவர். இதுவரை 29 நூல்களை எழுதியுள்ளார். மாய யதார்த்தக் கதைகளையும் எழுதிய வித்தியாசமான எழுத்தாளர். ஆங்கிலத்திலும் இவர் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து