முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2025      உலகம்
Imran-Khan 1

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகும்படி இம்ரான்கான் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக இம்ரான்கானின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் சோஹைல் அப்ரிடிக்கு போராட் டத்திற்குத் தயாராகும்படி நான் ஒரு செய்தியை அனுப்பியுள்ளேன். முழு தேசமும் அதன் உரிமை களுக்காக எழுந்து நிற்க வேண்டும். இந்தத் தீர்ப்பு எந்த ஆதாரமும் இல்லாமல், சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நீதிபதியால் அவசரமாக வழங்கப்பட்டது. இவ்வழக்கில் எனது சட்டக் குழுவின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை" என்று தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து