முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் விசா கெடுபிடிகளால், இந்தியர்களின் பணி வாய்ப்பு பறிப்பு, அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தல் என்ற செய்திகள் அதிகம் வெளியான நிலையில், 2025ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தொடர்பான தரவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதன்படி, நாம் கடந்து கொண்டிருக்கும் 2025-ம் ஆண்டில் சுமார் 81 நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று மாநிலங்களவையில் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், அனைவரும் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்துதான் அதிகமானோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருப்பர் என்று எண்ணலாம். ஆனால் அது உண்மையில்லை. முதல் இடத்தில் இருப்பது சௌதி அரேபியா. கடந்த 12 மாதங்களில், சௌதி அரேபியாவிலிருந்துதான் 11,000 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், அமெரிக்காவிலிருந்து வெறும் 3,800 பேர் அதுவும் சட்டவிரோதமாக நுழைந்தவர்களும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மியான்மர் அடுத்த இடத்தில் இருக்கிறது. இங்கிருந்து 1,591 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், இங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், வேலை தேடிச் சென்று சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறதும்.

ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து நாடு கடத்தப்படக் காரணங்களாக, வேலை விசா இல்லாமல் இருப்பது, விசா காலம் முடிந்துவிட்டது போன்றவை முன்னணியில் உள்ளன. இங்கிருந்து 1,469 பேர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த பட்டியலில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியாவும் உள்ளன. இந்த நாடுகளிலிருந்து வந்தவர்களும் பெரும்பாலும் வேலைதேடிச் சென்று சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியவர்களே பெரும்பாலானோர் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து