முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      தமிழகம்
SIR 2025-11-17

சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர்கள் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்தசூழலில் எஸ்.ஐ.ஆர் பட்டியலில் நடைபெறும் குளறுபடிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 - 20 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்தவர்கள், புதிய வாக்காளர்கள், முழுமையான தகவல் தராதவர்கள் என பல லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து