முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது

செவ்வாய்க்கிழமை, 30 டிசம்பர் 2025      தமிழகம்
CM-1-2025-12-30

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் சமர்ப்பித்தனர். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து கோரிக்கை... 

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவ வசதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு, மகப்பேறு விடுப்பு, கடன் உதவி என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்த போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரிவான ஆய்வு... 

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. 

பல கட்டங்களாக... 

அதன்படி, அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்திய அந்த குழு, எல்.ஐ.சி. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அந்த குழு சமர்ப்பித்தது. முழு அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தைக்கு... 

இந்த நிலையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளனர்.

விரைவில் அறிவிப்பு...

இந்த நிலையில் அனைவரின் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த இறுதி அறிக்கையின் அடிப்படையில் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து