முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 30 டிசம்பர் 2025      இந்தியா
Priyanka 2024-12-04

ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகனான ரைஹான் வதேராவிற்கும், டெல்லியைச் சேர்ந்த அவிவா பேக் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

7 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்தநிலையில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் ரைஹான். அதனை அவிவா ஏற்றுக்கொண்ட நிலையில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து இன்று ராஜஸ்தானின் ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவிவா பேக் டெல்லியை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். புகைப்பட ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். அவிவா பேக் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் வசிக்கின்றனர். அவரது தந்தை இம்ரான் பெக் ஒரு தொழிலதிபர். ரைஹான் வதேராவும் ஒரு புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து