முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு

புதன்கிழமை, 31 டிசம்பர் 2025      உலகம்
Jaishankar-2025-12-31

டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர் மோடியின் கடிதத்தை அவரது மகனிடம் ஒப்படைத்தார்.

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், கொல்லப்பட்ட அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியுமான கலீதா ஜியா, உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (டிச. 30) காலை காலமானார். இதனைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தலைநகர் டாக்காவில் நேற்று (டிச. 31) நடைபெறும் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில், இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதையடுத்து, வங்கதேச முன்னாள் பிரதமரின் மறைவுக்கு பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானிடம் அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்படைத்ததாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து