முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கயி்ற்றின் மீது நடப்பவர்கள்: ரஷ்யாவில் வினோத கிராமம்

Image Unavailable

நம்மூர்களில் திருவிழாக் காலங்களில் வித்தை காட்டும் கலைஞர்கள் தெருவில் இரு புறமும் கயிறை கட்டி கூத்தாடுவதை பார்த்திருக்கிறோம். அதையை சற்று உயரமாகவும், நீளமாகவும் மாற்றி வெளிநாடுகளில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் மீது கயிற்றை கட்டி அசால்ட்டாக நடந்து சென்று சாதனை செய்த வீடியோ நெட்டில் வைரலாக பரவியதை அனைவரும் பார்த்திருக்கலாம்.

ஆனால் ஒரு கிராமமே கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமத்தில் முதியவர் தொடங்கி இளையவர் வரை, பெண்கள் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவரும் கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களாக அசத்து கின்றனர். இந்த வினோத கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா.. ரஷ்யாவில்.. பொதுவாகவே சர்க்கஸ் துறையில் ரஷ்யர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்கள். கடந்த நூற்றாண்டில் சர்க்கஸ் தொழில் செழித்து கிடந்த கால கட்டத்தில் ரஷ்யர்கள் உலகம் முழுவதையும் வியாபித்திருந்தனர். தற்போது சர்ககஸ் தொழில் படிப்படியாக குறைந்து விட்டது.

மக்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. அது கிடக்கட்டும்.. கயிற்றின் நடக்கும் அந்த கிராமம் Russia’s Dagestan autonomous republic என்று சொல்லப்படும் பிராந்தியத்தில் உள்ள Tsovkra-1 என்ற சிறிய கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே கயிற்றில் நடக்கும் திறன் பெற்றவர்கள் என்பதாலேயே அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் 3 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த அந்த கிராமம் தற்போது 300 பேராக குறைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கயிற்றின் மேல் நடக்கும் மரபை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago