முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரூ. 1 கோடிக்கு விற்பனையான காளைமாடு

Image Unavailable

இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி பெங்களுருவில் நடைபெற்றது. இந்தாண்டுக்கான கண்காட்சியை பெங்களுரூ வேளாண் அறிவியல் பல்கலை கழகம் ஒருங்கிணைக்கிறது. நவம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த கண்காட்சி ஜிகேவிகே வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய தானிய விதைகள், நாட்டு மாட்டு ரகங்கள், விலையுயர்ந்த பாரம்பரிய ஜாதி மாடுகள், வேளாண் கருவிகள், உழவு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும் பங்கேற்றனர்.

இதன் ஹை அட்ராக்சனாக விளங்கியது எது வென்றால் ஒரு நாட்டு காளை மாடு ரூ.1 கோடிக்கு விற்பனையானது என்பதுதான். போரே கவுடா என்பவருக்கு சொந்தமான மூன்றரை வயது கொண்ட Hallikar ரக காளை மாடுதான் தற்போது அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. உயர் ஜாதி நாட்டு மாட்டு ரகமான இந்த காளையின் உயிரணுவுக்கு மிகுந்த டிமான்ட் இருப்பதால் ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் உயிரணு விற்பனை மூலம் மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

 எனவே இந்த காளைக்கு மிகுந்த தேவை இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். பொதுவாக மாடுகள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தான் விலை போகும். தற்போது ரூ.1 கோடிக்கு காளை விற்பனையான சம்பவம் விவசாயிகள் மத்தியில் ஆச்சரியமாக பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்