முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிளாஸ்டிக்கை விட காகித பைகள் பாதுகாப்பானவையா?

Image Unavailable

உலகையே அழிக்க வந்த நாசகார அரக்கன் பிளாஸ்டிக் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆகவே பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

அதே வேளையில் பிளாஸ்டிக் மாற்றாக காகித பைகள் சூழலை பாதிப்பதில்லை என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் இது நம்பிக்கை இல்லை மூட நம்பிக்கை என விளாசுகிறார்கள் விஞ்ஞானிகள். பிளாஸ்டிக் பைகளை போலவே காகித பைகளும் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தலானவை. காகித தயாரிப்பின் போது 75 சதவீத சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. காகித தயாரிப்பின் போது 80 சதவீதத்துக்கும் அதிகமான பசுமையை பாதிக்கும் வாயுக்கள் வெளியாவதாகவும், நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏராளமான எரிசக்தி ஆற்றலையும் இவை செலவிடுகின்றன. ஆகவே எது சிறப்பு என்றால் நம்மூர் மஞ்சப்பை அல்லது சணல்பை. இனி சாக்கு பையை கேவலமாக பார்க்காதீர்கள் மக்களே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்