முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பேக்ஸ் இயந்திரம் எப்படி உருவாச்சு தெரியுமா?

Image Unavailable

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843 இல் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அதில், செம்புக் கம்பிச்சுருளில் வைக்கப்படும் பேனா எழுதுவதை, சுருளின் மற்றோர் இடத்தில் இருந்த 2 ஆவது பேனா, அதை நகல் எடுக்கத் துவங்கியது.  பின்னர் 1851இல் ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862 இல் இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. "பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை" என்ற நிறுவனம் இதை 1856 முதல் 1870 வரை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியது.

ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1902இல் புகைப்படங்களை அனுப்பக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். இது புதிய பேக்ஸ் இயந்திரத்தின் அசலான முன்னோடி வடிவமாக திகழ்ந்தது. இதைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். அந்நாளில் பல ஜெர்மன் செய்தித்தாள் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வந்தன. பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரான்ஸ் விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் புதிய பேக்ஸ் இயந்திரமாக தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்