எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'முத்தின கத்தரிக்கா'
'முத்தின கத்தரிக்கா'
'முத்தின கத்தரிக்கா'
இயக்குநர் சுந்தர்.சி யிடம் பல படங்களில், இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் வெங்கட் ராகவன். இவர் தற்போது சுந்தர்.சி நாயகனாக நடிக்க 'முத்தின கத்தரிக்கா'என்ற பெயரில் ஒரு படத்தினை இயக்கிவருகிறார். அதனைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இயக்குநர் வெங்கட் ராகவன்; நான் சுந்தர்.சி சாருடன் பல படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளேன்.
அவர் நடித்தபடங்களின் காட்சிகளையும் நான் இயக்கியிருக்கிறேன். நான் இயக்குனராக மாறிய பின்,எனக்கு இது முதல் படம்,முதல் ஹீரோ, முதல் காட்சி என்கிற ஒரு உணர்வே இல்லை. எல்லாரும் ஒரு குடும்பமாக இணைந்து புதியதாக ஒரு படம் செய்கிறோம் என்கிற உணர்வு தான் என்னிடமிருக்கிறது. சுந்தர்.சி சார் என்னிடம்,விரைவாக ஒரு படத்தினை இயக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்.
படம் இயக்கலாம் என்ற முடிவெடுத்தபின் அவரையே நாயகனாக நடிக்குமாறு கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அவருடைய அவ்னி மூவிஸ் மூலமாக இந்தப் படத்தினை அவர் தான் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது பேய்க்கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா ஜானர்-லும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவராத ஒரு ஜானர்-ல் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம். மலையாளத்தில் வெளிவந்து’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "வெள்ளிமூங்கா" படத்தினை நானும்,சுந்தர்.சி சாரும் பார்த்தோம். இருவருக்கும் பிடித்திருந்தது.
இதையே தமிழில் ரீமேக் செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்தோம். மலையாளப் படத்தினை முழுமையாக அப்படியே ரீமேக் செய்யாமல் அந்தப்படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து,அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக எடுத்திருக்கிறோம். அதாவது அந்தப்படத்திலிருந்து ஒரு கோடு மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் ஒரு ரோடு போட்டிருக்கிறோம். மலையாளப் படத்தின் இயக்குநர் இந்தப்படத்தினைப் பார்த்தால் இப்படி கூட எடுக்கலாமா?என்று யோசிக்கும் அளவிற்கு 'முத்தின கத்திரிக்கா' படத்தினை எடுத்துள்ளோம். நான் இயக்குனர் ஆவதற்கு முன்பே என்னிடம் ஒரு ஐடியா இருந்தது. ஒரு மாடர்ன் பாக்யராஜ் சார் மாதிரி என் படத்தில் எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்க வேண்டும் என்பது தான் அது. அதை இந்தப் படம் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறேன். நான் படத்தின் காட்சிகளை, வசனங்களை எழுதி முடித்த பின் சுந்தர்.சி சாரிடம் காண்பித்தேன். என்னை வெகுவாகப் பாராட்டினார். மேலும் உடனடியாக படப்பிடிப்பினை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அவர் சொல்லிய ஒரு வாரத்தில் நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டோம் .
நடிகர்,மற்றும் தயாரிப்பாளர் என்று வெவ்வேறு நபர்கள் இருந்தால்,அவர்களிடம் தனித்தனியாக நான் சென்று படத்தினைப் பற்றி,காட்சிகளைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் இந்தப்படத்தில் இரண்டும் சுந்தர்.சி சாராக இருப்பதால் எனக்கு எளிதாக இருந்தது. படத்தில் ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தலைப்பிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். ரொம்ப வருடங்கள் திருமணமாகாமல் பேச்சிலராக இருக்கும் இளைஞர்களைத் தான் 'முத்தின கத்திரிக்கா'என்று சொல்வார்கள். கதாநாயகனை இமிடேட் செய்யக்கூடிய இந்தத் தலைப்பிற்கு ஓ.கே சொன்னதற்கே சுந்தர்.சி சார்க்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். மேலும் காட்சிஅமைப்பிலோ, வசனங்களிலோ எந்த ஒரு இடையூறும் செய்யாமல் என்னை சுதந்திரமாகச் செயல்படவிட்டார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பினை நாங்கள் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், குற்றாலம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நடத்தினோம். 40வயதான அரசியல்வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி,அரசியலிலும் சரி எதுவும் சாதிக்கமுடியாமல் இருக்கையில்,ஒரு கட்டத்தில் ஒரு பெண் மூலமாக அவரது வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வு அவரை,அரசியலில், சொந்த வாழ்க்கையில் எந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பது தான் கதை. படம் முழுவதும் இந்த ஒரு கதாபத்திரத்தின் செயல்பாடுகளைப் பற்றியே தானிருக்கும். அவரை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்,அவருடைய எதிரிகள் யார்?அவரால் ஏன் அரசியலில் சாதிக்கமுடியவில்லை என ஒவ்வொரு காட்சியும் அதனைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றது. பாடல் காட்சிகளும் கதையோடு இணைந்து வரும்படியாகப் படமாக்கியுள்ளோம். கதாநாயகனுடன் இணைந்து ஒரு நகைச்சுவை நடிகர்,படம் முழுவதும் தோன்றுவார். அந்தக் கதாபத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். அவருடைய அந்த கதாபாத்திரத்திற்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல,படத்தில் ஒரு நகைச்சுவைப் பட்டாளமே உள்ளனர். அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.
படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு தந்தனர். கதாநாயகி பூனம் பஜ்வா மற்றும், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் என,என்னோடு பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் விரைவாகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு இடத்திலும் படத்தின் தரம் குறையாமல் பார்த்துக் கொண்டனர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை,யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில்,அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இழையோடியிருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.
சண்டைக்காட்சியானாலும்,செண்ட்டிமெண்ட் காட்சியானாலும்,காதல் காட்சியானாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்கும். ரசிகர்கள் அனைத்துக் காட்சிகளிலும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அது நிச்சயமாக நிறைவேறும். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய ஒரு முழுமையான நகைச்சுவைப் படம் இது. என்று இயக்குநர் வெங்கட் ராகவன் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது
23 Aug 2025சென்னை : சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது.
-
ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி
23 Aug 2025டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.
-
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்
23 Aug 2025சென்னை : வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் : கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
23 Aug 2025ராமேசுவரம் : வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலியாக 12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.
-
விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
23 Aug 2025மும்பை : மும்பையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.
23 Aug 2025பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
-
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
23 Aug 2025சென்னை : வைணவத் கோவில்களுக்கு புரட்டாசு மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
23 Aug 2025கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
-
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி
23 Aug 2025சென்னை : எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.
-
விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
23 Aug 2025டெல்லி : விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா என்று சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
-
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசுக்கு கர்நாடக கோரிக்கை
23 Aug 2025பெங்களூரு : மேகதாது அணை விவகாரத்துக்கு தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கர்நாடகாவில் கனமழை
23 Aug 2025பெங்களூரு : கர்நாடகாவில் 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை; சிரியாவை சேர்ந்தவர் கைது
23 Aug 2025காந்திநகர் : காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
-
விஜய்க்கு பா.ஜ.க. வேண்டுகோள்
23 Aug 2025சென்னை : மக்கள் நல அரசியல்வாதியாக விஜய் மாற வேண்டும்: பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
மருத்துவ துறையில் 6 ஆயிரம் பணியிடங்கள்: தொகுப்பூதித்தில் நிரப்ப செவிலியர்கள் எதிர்ப்பு
23 Aug 2025கும்பகோணம் : நோய் தடுப்பு மருந்து துறையில் 6 ஆயிரம் செவிலியர்கள் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
டி20 கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வீரர் இம்ரான் தாஹிர் புதிய சாதனை
23 Aug 2025ஆன்டிகுவா : டி20 கிரிக்கெட்: 46 வயதில் 5 விக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்தார் இம்ரான் தாஹிர்.
-
துலீப் டிராபி தொடரை தவறவிடும் சுப்மன் கில்
23 Aug 2025மும்பை : துலீப் டிராபி தொடரை சுப்மன் கில் தவறவிட்டார்.
-
கடைசி ஒருநாள் போட்டி: ஆஸி. - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
23 Aug 2025மெக்காய் : கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
-
முகமது சிராஜை வாங்க முடியாமல் போக காரணம் - விளக்கம் அளித்த ஆர்.சி.பி.
23 Aug 2025பெங்களூரு : முகமது சிராஜை வாங்க முடியாமல் போக காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது ஆர்.சி.பி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து
24 Aug 2025புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
24 Aug 2025செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
-
ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை
24 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை படைத்தார்.