எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.1 - எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய பந்த் விடுக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் போராட்டம் பிசுபிசுத்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. வாகனங்கள் வழக்கம் போல் ஓடின. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து இன்று பிஜேபி மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வட நாட்டில் ஓரளவு பந்துக்கு ஆதரவு இருந்த போதிலும் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிப்பில்லை.
சென்னை நகரில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்களும் திறந்திருந்தன. அரசு பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகியவை வழக்கம் போல் ஓடின. ஷேர் ஆட்டோக்களும் இயங்கின. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்nullர் ரெயில் நிலையங்களில் ரெயில் போக்குவரத்து எந்த பாதிப்பும் இன்றி நடைபெற்றது. மின்சார ரெயில்கள் வழக்கம் போல் ஓடின. பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கம் போல் காய்கறிகள் வந்து இறங்கின. சிறு வியாபாரிகள் அவற்றை வழக்கம் போல் வாங்கிச் சென்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிப்பின்றி நடைபெற்றது. அனைத்து விமானங்களும் வழக்கம் போல் வந்தன. மும்பை செல்லும் விமானத்திற்கு போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இயல்பு நிலைமை பாதிக்கப்படவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை திறந்திருந்தன.வாகனங்களும் வழக்கம் போல் ஓடின. பால் முகவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிவித்திருந்தாலும் பால் விநியோகம் தடையின்றி நடைபெற்றது. கடை அடைப்பு இல்லை என்று வணிகர் சங்கங்கள் அறிவித்தன். த.வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரவை கடை அடைப்பு நடைபெறும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டில் சில இடங்களில் மறியல், கல்வீச்சுகள் நடந்தாலும் உடனடியாக போலீசார் அவற்றை ஒழுங்குபடுத்தினார்கள். சென்னை நகரில் மக்கள் அதிகமாக கூடும் சென்ட்ரல், எழும்nullர் ரெயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சாலைகளின் முக்கிய சந்திப்புகள் ஆகியவற்றில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி ராமானுஜம் உத்தரவிட்டர். இதனால் நேற்றுமுன்தினம் இரவில் இருந்தே சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு விடிய, விடிய வாகன சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பஸ் டெப்போக்கள், ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். திறந்திருக்கும் கடைகளை அடைக்கச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகளில் சுமார் ஒரு லட்சம் போலீசார் ஈடுபட்டனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
தமிழக காவல் துறையின் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்கு சரியாக நிலைநாட்டப்பட்டது. மொத்தத்தில் எதிர்க்கட்சிகள் அறிவித்த பந்த் பிசுபிசுத்தது என்பதே உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |