முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமீறினால் 2 வருடம் சிறை தண்டனை

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை. ஜூன்.1 - 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 12.06.2012 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து 10.06.2012 மாலை 5.00 மணிக்கு பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்வரும் நடைமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வ.கலைஅரசி தெரிவித்துள்ளார். எந்த ஒரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் பொதுக்கூட்டமோ, ஊர்வலம் நடத்தவோ, கலந்து கொள்ளவோ கூடாது. பொதுமக்களுக்கு திரைப்படம் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது இதுபோன்ற எந்த ஒரு சாதனம் மூலமாகவோ தேர்தல் தொடர்பான விவரங்கள் காண்பிக்க கூடாது. பொதுமக்களுக்கு, இசைநிகழ்ச்சியின் மூலமோ அல்லது நடிப்பு, நாடகம் மற்றும் இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் எவரும் செய்யக்கூடாது. இதில் விதிமுறை மீறல்கள் ஏதேனும் இருப்பின் அபராதம், அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் பெற தகுதியுடையவர்களாவர்கள். 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களாக இல்லாதவர்கள் தேர்தல் தொடர்பாக வரவழைக்கப்பட்ட வெளியூரைச் சேர்ந்தவர்கள் 10.06.2012 மாலை 5.00 மணிக்கு பிறகு உடனடியாக வெளியேற வேண்டும். 

அத்தொகுதியைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்குள் அனுமதிக்கப்படுவர். இருப்பினும் அவர்கள் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் எதிலும் ்டுபடக்கூடாது. திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியுர்ைகளை சேர்ந்தவர்கள் எவரும் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் 180 புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் வருவது கண்காணிக்கப்படும். வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட வாகன அனுமதி 10.06.2012 மாலை 5.00 மணியுடன் காலாவதியாகிவிடும். 

தேர்தல் நாள் பயன்பாட்டிற்காக ஒரு வேட்பாளர் தனியாக விண்ணப்பம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகன அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேட்பாளருக்கு வேட்பாளரின் பயன்பாட்டிற்காக ஒன்றும்,வேட்பாளரின் தேர்தல் முகவருக்காக ஒன்றும், வேட்பாளரின் கட்சி தொண்டர்களுக்காக ஒன்றும் ஆக மேற்கண்டவாறு மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பாளரோ அல்லது முகவருக்கோ வாக்காளர்களை வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வதற்கு வாகன அனுமதி கிடையாது.1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 133ன்படி வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு 200 மீட்டருக்கு அப்பால் மட்டும் வேட்பாளரின்டிஅரசியல் கட்சியினர் தற்காலிகமாக தேர்தல் முகாம் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அதில் 2 நபர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். தேவையற்ற கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மேற்படி அலுவலகத்தில் உணவுப் பொட்டலங்கள் வழங்கக் கூடாது. மேற்படி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் அதே வாக்குசாவடியின் வாக்காளராக இருக்க வேண்டும் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ாநுடஐஊா கார்டு உடையராக இருக்க வேண்டும். குற்ற முன்நிகழ்வுகளில் சம்மந்தப்பட்டவர்கள் மேற்படி அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டாது. 10.06.2012 அன்று 5 மணிக்கு பின்பு 12.06.2012 வரை தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து வெளியிடுவது, தேர்தல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவது, தேர்தல் முடிவுகள் பற்றி தெரிவிப்பது தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் .வ.கலைஅரசி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!