எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டன், ஆக. 3 - அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் சரியில்லாத பொருளாதார சூழல் காரணமாக உலகெங்கும் தொழில்துறைகள் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக உற்பத்தித் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஆரம்பித்த பொருளாதார சரிவும் கடன் பிரச்சனையும் ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள மற்ற 13 நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட தங்களது இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்துவிட்டன.
இந்த இறக்குமதிக் குறைப்பால் மிகக் கடுமையான பாதிப்பை சீனாவும் இந்தியாவும் சந்தித்துள்ளன. இதனால் சீனா, இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து பணியாளர்களையும் குறைக்க ஆரம்பித்துள்ளன.
இதே பிரச்சனையைத் தான் அமெரிக்க தொழில் நிறுவனங்களும் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் அளவு பெருமளவு குறைந்துவிட்டது. குறிப்பாக அமெரிக்கக் கார் நிறுவனங்களின் ஐரோப்பிய இறக்குமதி ஆர்டர்கள் சுருங்கிவிட்டன.
பொருளாதார சூழல் சரியில்லாத நிலையில் ஐரோப்பிய நாடுகளில் செலவு செய்வதும், முதலீடுகள் செய்வதும் பெரிய அளவில் சுருங்கிவிட்டது.
இதனால் கொரியா, தைவான், பிரேசில் ஆகிய நாடுகளின் ஐரோப்பிய ஏற்றுமதிகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025