100 மீ தடை தாண்டும் ஓட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு தங்கம்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 9 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளி ருக்கான 100 மீ தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை பியர்சன் புதிய சாதனையுடன் முத லிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கடந்த இரண்டு வார கால மாக நடைபெற்று வருகிறது. 

மகளிருக்கான 100 மீ தடைதாண்டும் ஓட்டப் போட்டி நேற்று நள்ளிரவு நடந்தது. இதில் ஆஸ்திரேலிய வீராங்க னை சாலி பியர்சன் புதிய ஒலிம்பிக் சா தனை படைத்தார். 

பியர்சன் பந்தய தூரத்தை 12.35 வினாடி களில் கடந்து முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு ஏதெ ன்ஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க வீராங்க னை ஜோனா ஹெஸ்ய் 12.35 வினாடி களில் கடந்ததே சாதனையாக இருந் தது. 

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை டான் ஹார் ப்பர் 12.37 வினாடியில் கடந்து வெள்ளி ப் பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை கெல்லி வேல்ஸ் 12.48 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்க மும் வென்றனர். 

ஆண்களுக்கான உயரம் தாண்டும் பிரி வில் ரஷ்ய வீரர் இவான் உகோய் 2.38 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்க வீரர் எரிக் 2.33 மீ உய ரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

3 வீரர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர். கத்தாரைச் சேர்ந்த முடாஸ் இசா, கனடாவைச் சேர்ந்த எரிக் டுரவுன், இங் கிலாந்தைச் சேர்ந்த ரோபர்ட் ஆகி யோர் தலா 2.29 மீட்டர் தாண்டினர். இதனால் 3 பேருக்கும் வெண்கலம் கிடைத்தது. 

ஆடவருக்கான 1,500 மீ ஓட்டப் போட்டியில் அல்ஜீரியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அந்நாட்டைச் சேர்ந்த தவு பீக் 3 நிமிடம் 34.08 வினாடியில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். 

அமெரிக்க வீரர் லியோனவ் 3 நிமிடம் 34.79 வினாடியில் கடந்து வெள்ளிப் பத க்கமும், மொராக்கோ வீரர் ஹைதர் 3 நிமிடம் 35.13 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். 

வட்டு எறிதலில் ஜெர்மனி வீரர் ராபர்ட் ஹார்ட்டிங் 68.27 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். ஈரான் வீரர் ஹிதாத் வெள்ளியும் (68.18 மீட்டர்),  எஸ்டோ னியா வீரர் காண்டர் வெண்கலமும் ( 68.03 மீட்டர் ) வென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: