200 மீ ஓட்டப் போட்டி: உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 11 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் முதலாவதாக வந்து மீண்டும் சாம்பிய ன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறார். 

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.25 மணிக்கு நடந்தது. 

இதில் உலக சாதனையாளரும், ஒலிம் பிக் சாம்பியனுமான உசேன் போல்ட், யோகனன் பிளேக், வாரன் வியா (ஜமைக்கா), வாலஸ் பியர்மேன் (அமெரிக்கா), அனசோ (தென் ஆப்பிரிக் கா), அலெக்ஸ் குவானக்ஸ் (ஈகுவடா ர்), லெமட்ரி (பிரான்ஸ்), மார்ட்டினா (நெதர்லாந்து) ஆகியோர் பங்கேற்றனர். 

இதில் உசேன் போல்ட் மிகவும் சிறப் பாக ஓடி வெற்றி பெற்றார். அவர் பந் தய தூரத்தை 19.32 வினாடிகளில் கடந் து தங்கப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் உசேன் போல்ட் புதிய வரலாறு படைத்தார். 

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அவர் 100 மீ, 200 மீட்டர் ஓட்டங்களில் புதிய சாத னையுடன் தங்கம் வென்றார். தற்போ து இந்த ஓலிம்பிக்கில் 100 மீ. 200 மீ போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பி யன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். 

தடகளத்தில் ஜாம்பவனான கார்ல் லீவிஸ் 1984 -ம் ஆண்டு ஒலிம்பிக்கில், 100 மீ, 200 மீட்டரில் தங்கம் வென்றார். 1988 - ல் 100 மீ யில் தங்கம் வென்றார். 200 மீ. யில் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது 

ஆனால்  அமெரிக்க வீரர் கார்ல் லீவி சை விட உசேன் போல்ட் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை இந்த ஒலிம்பிக் போட்டி மூலம் நிரூபித்துக் காட்டி புதி ய வரலாறு படைத்து  இருக்கிறார். 

1972 மற்றும் 1976 -ம் ஆண்டு ஒலிம்பிக் கில் பின்லாந்து வீரர் விரென் 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அடுத்தடுத்து தங்கம் வென்றார். 

அவருக்குப் பிறகு, தற்போது உசேன் போலட் 100 மீ, 200 மீ ஓட்டங்களில் தொடர்ந்து 2 ஒலிம்பிக்கில் தங்கம் வென் று முத்திரை பதித்தார். 

200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, வெண்கலமும் ஜமைக்காவுக்கே கிடைத்தது. அதாவது முதல் 3 இடங்களையும் அந் நாட்டு வீரர்களே  பிடித்தனர். 

யோகனன் பிளேக் 19.44 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், வாரன் 19.84 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை புரிந்தனர். 

ஆடவருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் உசேன் போல்ட் தங்கம் வெ ல்ல வாய்ப்பு உள்ளது. கடந்த ஒலிம்பி க்கிலும் உசேன் போல்ட் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். 

ஆடவருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டம் இன்று நடக்க இருக்கிறது. இதில் ஜமைக்கா அணி வெற்றி பெற்றால் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 6-வது தங்கம் வெல்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: