முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் சங்கத்தை சீர்குலைக்க முயற்சி: இயக்குனர் அமீர்

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.28 - திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தவர் இயக்குனர் அமீர். இவர் திடீரென தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.  இதுகுறித்து அமீர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக இயக்குனர் சங்கத்தை சீர்குலைக்கும் வகையில் சில பொதுக்குழு உறுப்பினர்கள் தவறான வழியில் செயல்பட்டு வந்துள்ளனர். அதாவது, சங்கத்தின் லெட்டர்பேடை எடுத்து தலைவர் மற்றும் செயலாளர் கையொப்பம் இல்லாமல் போலி கையொப்பமிட்டு பயன்படுத்தியுள்ளனர். இது எங்கள் கவனத்திற்கு வந்தபிறகு இதுகுறித்து விவாதித்தோம். இதற்கு உடன்படாமல் 6 உறுப்பினர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர். 

இதுபற்றி நடவடிக்கை எடுக்கச் சொல்லி தவறுகளை களைய வேண்டி, நான் எனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த ராஜினாமா கடிதத்தை துணை தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளேன். இவ்வாறு அமீர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis