எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.12 - அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா இறுதி நாளான நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து நிறைவு செய்தார்.
இது பற்றி விபரம் வருமாறு:-
ஏற்கனவே சென்னையில் 2 கட்ட பிரச்சாரத்தை செய்த ஜெயலலிதா நிறைவு நாளான நேற்று சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து நேற்று மாலை 5 மணிக்கு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே.13-ந் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க., தே.மு.தி.க. சி.பி.எம்., சி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுது. கடந்த மார்ச் 24-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவங்கிய ஜெயலலிதா தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார். சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக 2 கட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா பிரச்சாரத்தின் இறுதி நாளாளன நேற்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்காக திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் மதியம் 12 மணி அளவில் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா கடற்கரை சாலை வழியாக ராயபுரம் கல்மண்டபம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
பின்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக திருவொற்றியூர் தேரடியை அடைந்த ஜெயலலிதா அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன்பின் தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம் வழியாக பிரச்சாரம் செய்து கொருக்குப்பேட்டையில் ஆர்.கே.நகர் வேட்பாளர் வெற்றிவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு எம்.கே.பி.நகர், அசோக் பில்லர் அருகே சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சவுந்தர்ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பின்பு பேசின் பாலம் அருகே வாக்கு சேகரித்த ஜெயலலிதா மின்ட் தங்க சாலை வழியாக பிராட்வே செல்லும் பிரகாசம் சாலையில் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு பாரிமுனை கடற்கரை சாலை வழியாக நொச்சிகுப்பம் பின்புறம் உள்ள டுமில் குப்பத்தில் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜலட்சுமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தன் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.
ஜெயலலிதா செல்லும் வழியெங்கும் பொதுமக்களும், பெண்களும், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் திரளாக நின்று உற்சாகமாக வரவேற்றனர். வழியெங்கும் கட்சி சின்னங்கள், கொடிகள், பதாகைகளை ஏந்தி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல இடங்களில் தொண்டர்கள் பூங்கொத்துக்களை வழங்கியும், ஆரத்தி தட்டு மற்றும் பூரண கும்ப மரியாதையும் அளித்து வரவேற்றனர்.
ஒளதுறைமுகம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அர்சகர்கள் திரண்டு வேதம் முழங்க வாழ்த்து தெரிவித்தனர். பல இடங்ளில் கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தனர். ஐஸ்ஹவுஸ் பகுதியிலும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நோதாஜி நகரிலும் ஏராளமான முஸ்லீம் பெண் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் வழக்கறிஞர்கள் கை கோர்த்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். ராயபுரம் தொடங்கி திருவொற்றியூர் வரை வழியெங்கும் மீனவர்களும், மீனவ சமுதாய பெண்களும் திரளாக சாலையோரம் நின்று ஜெயலலிதாவிற்கு வரவேற்பு அளித்தனர்.
மீனவர்களுக்கு படகுகள் வாங்க மானியத்துடன் கடன், மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்ட 45 நாட்களுக்கு உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி தருவது போன்ற அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தபோது மீனவர்கள் பெரும் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஊதியத்தை வழங்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா தமிழகத்தை காக்க ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை காக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக செய்வோம் என்று பதிலளித்தனர்.
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குடிதண்ணீர் பிரச்சினை பற்றி ஜெயலலிதா பேசியதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்திற்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஜெயலலிதா மக்கள் வெள்ளத்தில் நீத்தியபடி மெதுவாகதான் செல்ல முடிந்தது. மக்கள் வெள்ளத்தை விளக்கி வாகனத்தை செலுத்த பாதுகாவலர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மைலாப்பூரில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வந்தபோது மீனவ மக்கள் கடலுக்குள் படகுகளில் பெரிய பெரிய கட்சிக்கொடிகளை கட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தற்போது பிரதமர் பதவியோ, பீகார் முதல்வர் பதவியோ காலியாக இல்லை : பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
29 Oct 2025பாட்னா : பீகார் முதல்வர் பதவியும், பிரதமர் பதவியும் தற்போது காலியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
29 Oct 2025சென்னை : டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு: தமிழகத்தில் வரும் 10-ம் தேதிக்கு பிறகு சூறாவளி ஆட்டம் துவக்கம்
29 Oct 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 10-ம் தேதிக்கு பிறகு சூறாவளி காற்று ஆரம்பமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி
29 Oct 2025டெல்லி : டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வியடைந்தது.


