முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன பிரதமர் குடும்பத்திற்கு 14,000 கோடி சொத்து?

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், அக். 28 - சீன பிரதமர் வென்சியாபோ விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ரூ. 14 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சீன பிரதமராக வென்சியோபோ கடந்த 1992 ல் இருந்து 20 வருடங்களாக பதவி வகித்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் அவரது மகன், மகள், தம்பி மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் மிகப் பெரும் பணக்காரர்களாக மாறியிருப்பது தனது புலனாய்வில் தெரியவந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

பிரதமரின் மனைவி ஜாங்பைலி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ரூ. 14 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக ஆவணங்கள் காட்டுவதாகவும், பல சொத்துக்கள் மறைக்கப்பட்டு பினாமிகள் பெயரில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பிரதமரின் மனைவி மற்றும் உறவினர்கள் காப்பீடு, தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய உதவியுள்ளதாகவும் டைம்ஸ் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள சீன அரசு இது தங்களை களங்கப்படுத்தும் பிரச்சாரம் என்று கண்டித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்