முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு,ஏப்.16 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற மேல்சபை தேர்தலில் கட்சி மாறி ஓட்டுப்போட்ட விவகாரத்தில் அந்த மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேல்சபைக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட கூட்டம் நேற்றுமுன்தினம் மாலையில் நடைபெற்றது. இதில் மாநில பா.ஜ. அரசியல் விவகாரத்தை கவனிக்கும் ஒ.பி.கோஹில், பா.ஜ. தேசிய பொதுச்செயலாளர் ஜே.பி.நாதா மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பா.ஜ. எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டனர். பாரதிய ஜனதா சார்பில் தாகூர் ரஞ்ஜித் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். பா.ஜ.கட்சியில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால் தாகூருக்கு வெறும் 4 ஓட்டுக்கள்தான் கிடைத்துள்ளன என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பா.ஜ. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள்,கட்சியின் தலைவர் நிதின் கட்காரியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சி மாறி ஓட்டுப்போட்டதால் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் தலைமையில் 5 எம்.பி.க்களை கொண்ட உயர்மட்டக்குழு அங்கு சென்றுள்ளது. இந்த குழு அங்கு 4 நாட்கள் தங்கியிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்