எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.18 - அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தி வரும் ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்தை ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே உள்ள ஒரு மாத இடைவெளியிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், சட்டம்ஒழுங்கை பராமரிக்கின்ற ஒரே ஒரு பொறுப்புதான் மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் பொறுப்பைக்கூட நிறைவேற்ற முடியாத லாயக்கற்ற அரசாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் கருணாநிதியின் தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. ஆட்சி பறிபோகப் போகிறதே என்ற பயம் காரணமாக அ.தி.மு.கழக உடன்பிறப்புகள் மீதும், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மீதும் தி.மு.க.வினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று நேற்று நான் குறிப்பிட்டு இருந்தேன். அதை நிரூபிக்கும் விதமாக, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருnullமலை பகுதியில் கழக உடன்பிறப்புகள் மீது தி.மு.க.வினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கழக உடன்பிறப்புகள் ராமு, முனுசாமி மற்றும் கங்காதரன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதே போன்று, தி.மு.க.வினரால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 16வது வட்டத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் குப்பன், ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட 14வது வட்டத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர்கள் மதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் படுகாயமடைந்து சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற பல வன்முறைச் செயல்கள் தி.மு.க.வினரால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தி.மு.க. ரவுடிக் கும்பலின் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சீரழிந்து கொண்டு இருக்கின்றது. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்ட கழக உடன்பிறப்புகளையும், அரசுக்கு எதிராக வாக்களித்த மக்களையும் பழிவாங்குவதற்காகத் தான் வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி விடப்பட்டதோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரவுடிக் கும்பல் ரவுடிகளை கட்டுப்படுத்தும்; வன்முறைச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தில் ஆங்காங்கே நிலவும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இது போன்ற வன்முறைச் செயல்கள் இனி நிகழா வண்ணம் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மேற்படி கொடூரத் தாக்குதல்களில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அன்புச் சகோதரர்கள் ராமு, முனுசாமி, கங்காதரன், குப்பன், மதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் nullரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் கைது: என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
15 Feb 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
-
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
15 Feb 2026புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம்
-
பெங்களூரில் விபத்து - 5 இளைஞர்கள் பலி
15 Feb 2026பெங்களூரு, பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
-
அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சா் விமர்சனம்
15 Feb 2026கோவை, த.வெ.க. தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?
15 Feb 2026சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தல
-
பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
15 Feb 2026புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
-
2024-25 நிதியாண்டில் மட்டும் தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை: அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 82 சதவீதமாம்
15 Feb 2026புதுடெல்லி, தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத
-
12 நாட்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் மூலம் மண் ஈரப்பத தரவுகள் வெளியீடு: இஸ்ரோ
15 Feb 2026பெங்களூரு, இந்திய நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து 12 நாட்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் தரவுகளை வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (
-
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி தீர்மானம்
15 Feb 2026சென்னை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்களை இன்று பரிசீலிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 Feb 2026திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செ
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்: ராகுல் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
15 Feb 2026புதுடெல்லி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார்.


