முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      இந்தியா
modi

புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) உலகெங்கிலுமுள்ள ஹிந்து பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. திங்கள்கிழமை (பிப். 16) அதிகாலை சிவராத்திரி விழா நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பக்தர்கள் அனைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியை தமது எக்ஸ் தளப் பக்கம் வழியாகப் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாடெங்கிலுமுள்ள எமது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் மகா சிவராத்திரி நாள் வாழ்த்துகள். ஒவ்வொருவர் மீதும் மகாதேவர் தமது கருணைப் பார்வையைச் செலுத்தட்டும் என்பதே எமது பிரார்த்தனையாக அமைந்திருக்கிறது. சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும்’ என்று வாழ்த்தியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து