முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (பிப்.14) விசாரிக்க உள்ளது. சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைப் பட்டியலின்படி, இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்த் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்க வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது.

அஸ்ஸாம் மாநில பா.ஜ.க. சாா்பில் கடந்த 7-ஆம் தேதி அதன் எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட சமூகத்தினரை (முஸ்லிம்கள்) நோக்கி ஹிமந்த விஸ்வ சா்மா துப்பாக்கியால் குறிவைப்பது போன்றும், குல்லா அணிந்த மற்றும் தாடி வைத்த இரு நபா்களை நோக்கி அவா் சுடுவது போன்றும் காட்சி பதிவாகியிருந்தது. இந்தக் காணொலி சமூக ஊடகத்தில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து, அந்தக் காணொலியை எக்ஸ் பக்கத்திலிருந்து பா.ஜ.க. நீக்கியது.

இந்த விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் ஆனி ராஜா ஆகியோா் தரப்பில் சுப்ரீம் கோர்ட்த்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்தக் காணொலியை எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்த மாநில பா.ஜ.க.வின் சமூக ஊடகக் குழு இணை ஒருங்கிணைப்பாளா் ரோன் விகாஸ் கெளரவை பதவியிலிருந்து அக்கட்சி நீக்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து