முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை அணி காலிறுதிக்கு தகுதி

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜன. - 3 - ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி குஜராத் அணியுட னான ஆட்டத்தில் டிரா செய்து காலிறுதிக்கு முன்னேறியது.  ரஞ்சிக் கோப்பைக்கான ஏ பிரிவு ஆட்டம் நடந்து வருகிறது. இதில் நவிமும் பையில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், குஜராத் அணியும் மோதின. இந்த ஆட்டம் இறுதியில் டிராவில் முடிவடைந்தது. இருந்த போதிலும், மும்பை அணி முத ல் இன்னிங்சில் குஜராத் அணியை விட கூடுதல் ரன் பெற்று இருந்ததால் அந்த அணிக்கு 3 புள்ளிகள் அளிக்கப்பட்டது. இதன் மூலம் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னையும், 2-வது இன்னிங்சில் 337 ரன்னையும் எடுத்தது. மும்பை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 447 ரன்னை எடுத்தது. பின்பு 2-வது இன்னி ங்சில் 27 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற் கு 65 ரன்னை எடுத்தது. குஜராத் அணியின் முதல் இன்னிங்சில் கேப்டன் பார்த்திவ் படேல் 146 பந்தில் 101 ரன்னை எடுத்தார். தவிர, மெராய் 84 பந்தில் 41 ரன்னும், கொகெல் 30 ரன் னும், துர்வ் 12 ரன்னும் எடுத்தனர். 

பின்பு 2-வது இன்னிங்சில் ஜுனேஜா 219 பந்தில் 98 ரன் எடுத்தார். தவிர,கே ப்டன் படேல் 47 பந்தில் 47 ரன்னும், ஜே. காந்தி 101 பந்தில் 64 ரன்னும், கொகெல் 27 ரனனும், மெராய் 24 ரன்னு ம், கலாரியா 43 ரன்னும், எடுத்தனர். மும்பை அணியின் முதல் இன்னிங்சில் துவக்க வீரர் வாசிம் ஜாபர் 271 பந்தில் 171 ரன் எடுத்தார். தவிர, என். ஷா 82 ரன்னும், எஸ். யாதவ் 42 ரன்னும், அபி ஷேக் நாயர் 72 ரன்னும், குல்கர்னி 22 ரன்னும் எடுத்தனர். குஜராஜ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி மும் பையில் உள்ள டாக்டர் டி. ஒய்  ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. 

இந்தப் போட்டி இறுதியில் டிரா ஆன போதிலும், மும்பை அணி முதல் இன் னிங்சில் கூடுதல் ரன் பெற்று இருந்த தால் அந்த அணிக்கு 3 புள்ளியும், குஜ ராத் அணிக்கு 1 புள்ளியும் அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்